ஃபால்குனி ஷா மற்றும் அவரது கணவர் கௌரவ் ஷா பாடிய ‘Abundance in Millets’ என்கிற பாடல் ஆனது, 2024 ஆம் ஆண்டு கிராமி விருதிற்கு சிறந்த உலகளாவிய இசைப் பாடல் பிரிவில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
மூன்று நாட்கள் அளவிலான உலக அமலாக்க விவகாரங்கள் ஒத்துழைப்பு மாநாடு (GCCEM) ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
இந்திய அரசானது, சர்வதேச சூரியசக்தி கூட்டணி பேரவையின் 6வது அமர்வினை புது டெல்லியில் நடத்துகிறது.
ஃபிளையிங் வெட்ஜ் பாதுகாப்பு மற்றும் வான்வெளிப் பொறியியல் நிறுவனமானது, உள்நாட்டு ஆளில்லா வான்வெளி வாகனத் தொழில்நுட்பத்திற்காக பொது விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தின் பொதுச் சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதல் தனியார் நிறுவனமாக மாறியுள்ளது.