TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 17 , 2023 246 days 193 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் 2023-24 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் இறையாண்மை பசுமைப் பத்திரங்களில் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி முதலீடு செய்வதற்கு அனுமதிக்கும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
  • பகிரப்பட்ட பெற்றோர் விடுப்பினை அறிமுகப்படுத்திய முதல் ஆப்பிரிக்க நாடாக தென்னாப்பிரிக்கா மாற உள்ளது.
    • பெற்றோர்கள் இருவரும் தங்களின் குழந்தை பிறந்த பிறகு அல்லது அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்த பிறகு மொத்தமாக நான்கு மாதங்கள் வரை விடுப்பு பெற உரிமை உண்டு.
  • 42வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது (2023) புது டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
  • சச்சின் டெண்டுல்கரை விஞ்சி, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதங்கள் (50) அடித்த சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆக விராட் கோலி உருவெடுத்துள்ளார்.
    • ஒரு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் அதிக ரன்கள் (674) எடுத்த வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்