TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 18 , 2023 245 days 195 0
  • இந்தியாவிலேயே முதன்முறையாக, சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, ஜம்மு-காஷ்மீரில் சிறை வைக்கப்பட்ட குலாம் முகமது பட் என்கின்ற கைதி, புவியிடங்காட்டி தடக் கண்காணிப்பு காலணி என்ற சாதனத்தினை அணிந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப் பட்டு உள்ளார்.
  • 14வது சாலைத் தொகுதியின் சுங்கச் சாவடி செயல்பாடுகள் பரிமாற்றத்தின் (TOT) ஏலத்திற்கான பணமாக்கல் திட்டத்திற்கான காப்பீட்டு உத்தரவாதப் பத்திரத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.
    • ஏலத்தினைப் பணமாக்குதலுக்காக வேண்டி, சாலை உள்கட்டமைப்புத் துறையில் வங்கிசார் உத்தரவாதமாக (BG) இந்தப் புதுமையான முறை  பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஆனது, தனது 234 ஆண்டு கால வரலாற்றில் அதன் ஒன்பது நீதிபதிகளின் நெறிமுறை நடத்தையை மேலாண்மை செய்வதற்காக என்று முதல் வகையான நடத்தை நெறிமுறையை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • உலக தத்துவ தினம் ஆனது, ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வியாழன் அன்று (16 ஆம் தேதி) அனுசரிக்கப்படுகிறது.
    • இது தத்துவக் கருத்துக்கள் குறித்து சிந்திக்கவும், விவாதங்களில் ஈடுபடவும், சமூகப் பிரச்சினைகளில் நாட்டம் செலுத்தவும் மக்களை ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்