TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 20 , 2023 243 days 202 0
  • ஆளுநரால் சட்டப் பேரவைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட சில மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநரிடம் திருப்பி அனுப்புவதற்காக நவம்பர் 18 ஆம் தேதியன்று தமிழ்நாடு சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டப்பட்டது.
    • தமிழக சட்டசபை வரலாற்றில் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் மறுபரிசீலனை செய்யப்பட உள்ளது இது மூன்றாவது முறையாகும்.
  • திருவண்ணாமலை ஜவ்வாது மலையின் ஜமுனாமரத்தூர் அருகே உள்ள கோவிலூர் கிராமத்தில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா வாகனத்தினைத் தமிழக ஆளுநர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு வக்லாவ் ஹேவல் மையத்தின் முதலாவது ‘வாழ்நாள் அமைதி சீர்குலைப்பு விருது’ வழங்கப் பட்டுள்ளது.
  • ஜன்ஜாதிய கௌரவ் திவாஸ் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.
    • ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய பழங்குடியினத் தலைவர் பிர்சா முண்டா அவர்களின் பிறந்தநாளை இத்தினம் நினைவு கூருகிறது.
  • 1939 ஆம் ஆண்டு செக் குடியரசின் ப்ரேக் நகரில் மாணவர்கள் உயிரிழந்த தினத்தை நினைவு கூரும் வகையில் நவம்பர் 17 ஆம் தேதியானது சர்வதேச மாணவர் தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய விமானப் படையைச் சேர்ந்த சூர்ய கிரண் வான்வெளி சாகசக் குழுவினர் விமான சாகச நிகழ்ச்சியை நடத்தினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்