TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 25 , 2023 238 days 186 0
  • இந்தியாவின் மிகப்பெரியத் தொண்டு நிறுவன கண் மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயாவின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் S.S. பத்ரிநாத் சமீபத்தில் சென்னையில் காலமானார்.
  • அரசுச் சங்கங்களை நிறுவனங்களாக மாற்றுவதற்கான சமீபத்திய முன்னெடுப்பின் ஒரு பகுதியாக 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் 8வது பிரிவின் கீழ், தமிழ்நாடு உயிரியல் பூங்கா அறக்கட்டளையை தமிழ்நாடு அரசானது பதிவு செய்து உள்ளது.
  • முதலாவது உலக மீன்பிடி மாநாடு – இந்தியா 2023 ஆனது அகமதாபாத் நகரில் அமைந்துள்ள அறிவியல் நகரில் நடைபெற்றது.
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பினை அதிகரிப்பதற்காகவும், முக்கியக் கனிமங்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற முக்கியத் துறைகளில் உத்திசார் உறவை ஆழப்படுத்தச் செய்வதற்காகவுமான 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை சமீபத்தில் நடைபெற்றது.
  • ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 21 ஆம் தேதியன்று உலக ஹலோ தினம் கொண்டாடப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்