இந்தியாவின் பங்கஜ் அத்வானி, கத்தாரின் தோஹா நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு உலக IBSF பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தனது 26வது உலக அளவிலான பட்டத்தை வென்றுள்ளார்.
இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) கிரிஷ் சந்திர முர்மு, ஐக்கிய நாடுகள் சபையின் தணிக்கைக் குழுவின் அடுத்த ஆண்டிற்கான துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு உகந்த மற்றும் நிலையான உணவுத் தேர்வாக சிறு தானியங்கள் விளங்குவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி இந்தோனேசிய தலைநகரான ஜகார்த்தாவில் ஐந்து நாட்கள் அளவிலான சிறு தானிய திருவிழாவை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இரண்டாவது ஆஸ்ட்ராஹிண்ட்-23 எனப்படுகின்ற ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பங்கேற்க உள்ளன.