TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 5 , 2023 228 days 197 0
  • இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி சபையின் முதல் பெண் தலைமை இயக்குநராக காஞ்சன் தேவி பொறுப்பேற்றுள்ளார்.
    • 1986 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதும், இந்தியாவில் வனவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ள மிகப்பெரிய அமைப்புமான இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்விச் சபையானது மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
  • கேப்டன் கீதிகா கௌல், உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த போர்க்களமான சியாச்சின் பகுதியில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் மருத்துவ அதிகாரி என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
    • சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியில், பொறியாளர்கள் பிரிவிலிருந்து கேப்டன் சிவா சௌஹான் நியமிக்கப் பட்டதற்கு அடுத்ததாக இந்த நியமனம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • மும்பையைச் சேர்ந்த படைத்தளபதி பிரெர்னா தியோஸ்டேல் INS சென்னை என்ற கடற்படை போர்க் கப்பலின் முதல் துணைநிலை தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.
    • அவர் டூபோலெவ் Tu-142 என்ற கடல் சார் உளவு விமானம் மற்றும்  P8I எனப்படும் மற்றொரு கடல் சார் உளவு விமானம் ஆகியவற்றின் முதல் பெண் கண்காணிப்பாளர் ஆவார்.
  • அமெரிக்காவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியான சாண்ட்ரா டே ஓ’கானர் அவரது 93 வது வயதில் காலமானார்.
    • அவர் 1981 ஆம் ஆண்டில், அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப் படுவதற்கு அதிபர் ரொனால்ட் ரீகனால் பரிந்துரைக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்