TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 8 , 2023 353 days 241 0
  • சிறந்தப் பாதுகாப்பு அமைப்பிற்கானப் புத்தாக்கம் (iDEX) என்ற பாதுகாப்புத் துறையின் முதன்மையான முன்னெடுப்பானது அதன் 300வது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
  • நன்ஹே ஃபரிஸ்டே என்பது தொலைந்து போன அல்லது தங்களது குடும்பங்களை விட்டு பிரிந்த குழந்தைகளை மீண்டும் அவர்களுடன் இணைப்பதற்காக இரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மேற்கொண்ட ஒரு முன்னெடுப்பு ஆகும்.
  • ஊபர் நிறுவனம் தனது உலகளாவிய முதன்மையான மின்சார வாகன வாடகைச் சேவையான ஊபர் கிரீன் சேவையை கர்நாடகாவின் பெங்களூருவில் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
    • மும்பையில் ஏற்கனவே இயங்கி வரும் ஊபர் க்ரீன் வசதியை அடுத்து இரண்டாவது சேவையை இது குறிக்கிறது.
  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பகமானது Z எனும் எழுத்தின் தலைமுறையில் மொழியியல் தேர்வுகளைப் பிரதிபலிக்கிற "ரிஸ்" (Rizz) என்ற வார்த்தையினை இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையாக வெளியிட்டுள்ளது.
    • இது மற்றொரு நபரை ஈர்க்கும் அல்லது கவர்ந்திழுக்கும் ஒருவரின் திறனை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல் ஆகும்.
  • இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி அளவிற்குச் சந்தை மூலதனத்தினைத் தாண்டிய 8வது நிறுவனமாக பார்தி ஏர்டெல் மாறியுள்ளது.
    • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்யுஎல் (இந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட்), இன்ஃபோசிஸ் மற்றும் ஐடிசி (இந்தியப் புகையிலை நிறுவனம் / India Tobacco Company) ஆகியவை இதர மற்ற நிறுவனங்கள் ஆகும்.
  • பஜாஜ் குழுமமானது சந்தை மூலதனத்தில் ரூ.10 லட்சம் கோடியைக் கடந்த ஐந்தாவது வணிக நிறுவனமாக மாறியுள்ளது.
    • முன்னதாக, டாடா குழுமம், முகேஷ் அம்பானி குழுமம் (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்), ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் அதானி குழுமம் ஆகியவை இந்த மைல்கல்லை எட்டியுள்ளன.
  • 6வது உலகப் பேரிடர் மேலாண்மை மாநாடானது உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள டேராடூனில் 'காலநிலை நடவடிக்கையை வலுப்படுத்துதல்' என்ற தலைப்பில் நடைபெற்றது.
    • ஐக்கிய நாடுகள் அமைப்புகளுக்கு வெளியே நடைபெறும் பேரிடர் மேலாண்மை குறித்த மிகப்பெரிய உலகளாவிய மாநாடாக இது உருவெடுத்துள்ளது.
  • டாடா மோட்டார்ஸ் தனது நான்காவது பதிவு செய்யப்பட்ட வாகனக் கழிவு (ஸ்கிராப்பிங்) வசதியை (RVSF) சண்டிகரில் திறந்துள்ளது.
    • டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே ஜெய்ப்பூர், புவனேஷ்வர் மற்றும் சூரத் ஆகிய இடங்களில் மூன்று RVSFகளைக் கொண்டுள்ளது.
  • அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் காப்பீட்டு நிறுவனங்களான MetLife மற்றும் Prudential Financial Inc ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளி LIC நிறுவனம் (503$ பில்லியன் கையிருப்பு) 2022 ஆம் ஆண்டில் உலகின் நான்காவது பெரிய காப்பீட்டு நிறுவனமாக மாறியுள்ளது.
    • முதல் மூன்று காப்பீட்டாளர்கள் நிறுவனங்களாவன அலையன்ஸ் SE (ஜெர்மனி), சீனா ஆயுள் காப்பீடு மற்றும் நிப்பான் ஆயுள் காப்பீடு (ஜப்பான்) ஆகியவை ஆகும்.
  • டெய்லர் ஸ்விஃப்ட் என்ற அமெரிக்கப் பெண் பாடகி-பாடலாசிரியர், டைம்ஸ் இதழின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • டைம்ஸ் இதழின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்தத் தடகள வீரராக அர்ஜென்டினாவின் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • மெஸ்ஸி எட்டாவது முறையாக 2023 ஆம் ஆண்டிற்கான Ballon d'Or விருதை வென்ற பிறகு இச்சாதனை பதிவானது நீடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்