TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 10 , 2023 222 days 172 0
  • தனி சோதனைப் பெட்டகங்களில் வைத்து மின்னணு உபகரணங்களைப் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தும் முறையை நீக்கிய இந்தியாவின் முதல் விமான நிலையம் பெங்களூரு விமான நிலையம் ஆகும்.
    • கெம்பகவுடா சர்வதேச விமான நிலையமானது, தானியங்கிப் பெட்டக சோதனை அமைப்பு மற்றும் முழு உடல் ஊடுருவல் ஆய்வுக் கருவியுடன் ஒருங்கிணைக்கப் பட்ட CTX இயந்திரங்களைப் பயணிகள் மத்தியில் சோதனை செய்யத் தொடங்கி உள்ளது.
  • ஹம்ஃபெஸ்ட் இந்தியா 2023 மாநாடானது, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் தேவுசின் சவுஹானால் தொடங்கி வைக்கப் பட்டது.
    • பயில்முறை வானொலி ஆர்வலர்களுக்கு இது ஒரு விரிவான தளமாக செயல் படுகிறது.
  • பார்தி குழுமத்தின் ஆதரவுப் பெற்ற OneWeb India நிறுவனம், இந்தியாவில் வணிக ரீதியான செயற்கைக்கோள் அகலப் பட்டை அலைவரிசை சேவைகளைத் தொடங்கச் செய்வதற்கு வேண்டி IN-SPACe அமைப்பிடமிருந்து அங்கீகாரம் பெற்றுள்ளது.
    • இந்தியாவில் இந்த அனுமதிகளைப் பெற்ற முதல் நிறுவனமாகவும் இந்தியாவின் ஒரே செயற்கைக் கோள் அகலப் பட்டை அலைவரிசை சேவை வழங்குநராகவும் இது உள்ளது.
  • இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையானது 2023 ஆம் ஆண்டு மத்தியப் பல்கலைக் கழகங்கள் (திருத்தம்) மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
    • இந்த மசோதாவின் முதன்மை நோக்கமானது, தெலுங்கானாவில் ‘சம்மக்கா சரக்கா மத்தியப் பழங்குடியினர் பல்கலைக்கழகத்தினை’ அமைப்பதாகும்.
  • பஞ்சாப் மாநிலத்தினைப் பூர்வீகமாக கொண்ட எழுத்தாளர் மீரா சந்த் (81), மாநிலத்தின் மிகவும் மதிப்புமிக்க கலை விருதான கலாச்சாரப் பதக்கத்தை பெற்ற மூன்று சிங்கப்பூர் நாட்டவர்களில் ஒருவர் ஆவார்.
    • அவர் நாவலாசிரியர் சுசென் கிறிஸ்டின் லிம் மற்றும் அனுபவமிக்க மலேசிய நடனக் கலைஞர் ஒஸ்மான் அப்துல் ஹமித் ஆகியோருடன் இந்தப் பதக்கத்தினைப் பகிர்ந்து கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்