TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 18 , 2023 214 days 186 0
  • தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிறுமிகள், பெண்கள் மற்றும் திருநர்கள் என அனைத்து வயதுடையவர்களும் TSRTC பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கும் மகா லட்சுமி திட்டத்தை தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • தமிழர்களின் கலாச்சாரச் சின்னமாக கருதப்படும் திருவள்ளுவர் சிலையானது பிரான்சு நாட்டின் செர்ஜி நகரில் திறக்கப்பட்டுள்ளது.
  • மும்பையைச் சேர்ந்த பேராசிரியை சவிதா லாடேஜ், வேதியியல் கல்விக்கான அவரது பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், வேதியியலுக்கான ராயல் சங்கத்தின் கல்விக்கான நைஹோம் பரிசின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • தேசிய அனல் மின் கழகம் (NTPC) ஆனது பிராண்டன் ஹால் குழுமத்தின் 2023 ஆம் ஆண்டு தொழில்நுட்ப விருது விழாவில் இரண்டு வெள்ளி விருதுகளை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்