TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 19 , 2023 213 days 185 0
  • பர்ராகுடா எனப்படுகின்ற சூரிய சக்தியில் இயங்கும், இந்தியாவின் அதிவேக மின்சார படகானது கேரளாவின் ஆலப்புழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்தியாவைச் சேர்ந்த லியாண்டர் பயஸ் மற்றும் ஒரு ஒளிபரப்பாளரும் புகழ்மிக்க விளம்பரதாரருமான விஜய் அமிர்தராஜ் ஆகியோர் சர்வதேச டென்னிஸ் புகழ் மன்றத்தில் சேர்க்கப் பட்ட முதல் ஆசிய ஆண்கள் என்ற பெருமையினைப் பெற்று உள்ளனர்.
    • இந்த இருவரோடு சேர்த்து, புகழ்பெற்ற பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ரிச்சர்ட் எவன்ஸ் என்பவரும் டென்னிஸ் போட்டிப் பிரிவின் உயர் சிறப்பு மன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • சர்வதேச நிதிக் கழகம் (IFC)  ஆனது, 2023 ஆம் ஆண்டு நிதி நிறுவனங்களுக்கான பருவ நிலை மதிப்பீட்டு (CAFI) தளத்தின் பருவநிலை அறிக்கையிடலுக்கான விருதுகளில் மிக சிறந்த செயல் திறன் கொண்ட நிறுவனமாக ஃபெடரல் வங்கியை அங்கீகரித்துள்ளது.
  • பொது விமானப் போக்குவரத்து இயக்குனரகம் ஆனது, அயோத்தியின் மரியாதை புர்ஷோத்தம் ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையத்திற்கு வானூர்தி தள உரிமத்தை வழங்கியுள்ளது.
  • ஒருங்கிணைந்த உலக மல்யுத்த (UWW) அமைப்பானது, 2023 ஆம் ஆண்டின் மகளிர் எழுச்சி நாயகியாக இந்தியாவின் ஆன்டிம் பங்கலை தேர்ந்தெடுத்துள்ளது.
  • ஐக்கியப் பேரரசின் 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 50 ஆசியப் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்ற முதல் 50 ஆசியப் பிரபலங்கள் பட்டியலில் ஷாருக்கான் முதலிடத்தில் உள்ளார், மேலும் அவரைத் தொடர்ந்து ஆலியா பட் மற்றும் பிரியங்கா சோப்ரா இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்