TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 20 , 2023 212 days 180 0
  • இந்திய விண்வெளித் துறையானது, 2035 ஆம் ஆண்டிற்குள் பாரதிய அந்தரிக்ஷா நிலையத்தை (இந்திய விண்வெளி நிலையம்) உருவாக்க திட்டமிட்டுள்ளது.
  • தேசியப் புத்தக அறக்கட்டளையினால் புனேவில் ஏற்பாடு செய்யப்பட்ட 3,066 பேர் பங்கேற்புடன் நடைபெற்ற மிகப்பெரிய வாசிப்பு நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
    • இதற்கு முன்னதாக இதே போன்ற சாதனையானது, சீனாவில் ஒரே நேரத்தில் 2,884 வாசகர்கள் கொண்டு நிகழ்த்தப்பட்டது.
  • ஸெப்டோ செயலியின் நிறுவனர்களான கைவல்யா வோஹ்ரா (21) மற்றும் ஆதித் பாலிச்சா (22) ஆகிய இளம் தொழில்முனைவோர்கள் ஹுருன் இந்தியா நிறுவனத்தின் 30 வயதிற்குட்பட்ட 100 முன்னணி தொழில்முனைவோர் பட்டியலில் (2023) முன்னணி இடங்களைப் பெற்றுள்ளனர்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு ஆகியவற்றின் கூட்டு முன்னெடுப்பான எல்லைகள் கடந்த வரி ஆய்வாளர்கள் (TIWB) திட்டம் ஆனது செயிண்ட் லூசியாவில் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
    • இந்தியா அதன் பங்குதார நிர்வாக அமைப்பாகத் தேர்ந்தெடுக்கப் பட்டதை அடுத்து, இந்தத் திட்டத்திற்கான வரி நிபுணர்களை வழங்க உள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 15 ஆம் தேதியன்று சர்வதேச தேயிலை தினம் ஆனது கொண்டாடப் படுகிறது.
    • 2005 ஆம் ஆண்டில் முதல் சர்வதேச தேயிலை ஒப்பந்தம் கையெழுத்தானதை நினைவு கூரும் வகையில் மே 21 ஆம் தேதியும் சர்வதேச தேயிலை தினமாக அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்