TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 22 , 2023 210 days 184 0
  • இரண்டாவது காசி தமிழ் சங்கமானது, வாரணாசியில் உள்ள 'நமோ காட்' என்னும் இடத்தில் தொடங்கப்பட்டது.
    • பண்டைய நகரமான காசிக்கும் தென் மாநிலமான தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள உணர்ச்சிப்பூர்வ மற்றும் ஆக்கப்பூர்வமான உறவுகளை வலுப்படுத்தும் ஒரு தளமாக இந்நிகழ்வு அமைந்தது.
  • வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய தியான மையத்தினை பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
  • தாய்லாந்தில் அமைந்த பெரும்பாலும் ஆய்வு செய்யப்படாத பகுதியில் 10 புதிய வகை ட்ரைலோபைட் (முக்கூற்று உடல் தொல்லுயிரி) இனங்களை புவியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
    • இந்த அழிந்துபோன கடல் வாழ் உயிரினங்கள் 490 மில்லியன் ஆண்டுகளாக மறைந்து காணப் பட்டன என்பதோடு, இவை கேம்ப்ரியன் காலத்தின் பிற் பகுதியில் இருந்த விலங்கினங்கள் குறித்த புதிய தகவல் வரைபடத்தை உருவாக்க அறிவியலாளர்களுக்கு உதவுகின்றன.
  • ஹரியானா அணியானது, விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் (2023) ராஜஸ்தான் அணியை வென்று தனது முதல் கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
    • இது முதலில் ரஞ்சி ஒரு நாள் கிரிக்கெட் கோப்பை என்று அறியப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்