TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 26 , 2023 335 days 235 0
  • இந்தியாவின் மொத்தக் கடன் அல்லது சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் மொத்த நிலுவையில் உள்ள பத்திரங்களின் மதிப்பு செப்டம்பர் மாதம் வரையான காலாண்டில் 2.47 டிரில்லியன் டாலர் (ரூ. 205 லட்சம் கோடி) ஆக உயர்ந்துள்ளது.
  • சர்வதேச மேசைப் பந்தாட்ட கூட்டமைப்பின் (ITTF) அறக்கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினராக இணைக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை விட்டா டானி பெற்றுள்ளார்.
  • கவிஞர் மற்றும் விமர்சகர் சுக்ரிதா பால் குமாரின் ‘’Salt & Pepper: Selected Poems’ என்ற புத்தகத்திற்காக அவருக்கு 6வது ரவீந்திரநாத் தாகூர் இலக்கியப் பரிசு வழங்கப் பட்டு உள்ளது.
  • தேசிய அனல் மின் கழகத்தின் கண்ட்டி அனல் மின் நிலையம் ஆனது “தொழில்துறை நீர் பயன்பாட்டுத் திறன்” பிரிவில் 11வது FICCI நீர் விருதினை வென்றுள்ளது.
  • இந்தியப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டு முகமையின் (IREDA) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பிரதீப் குமார் தாஸ் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ‘ஆண்டின் சிறந்த தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்’ விருதைப் பெற்றுள்ளார்.
  • தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும் பத்ம பூஷன் விருது பெற்றவருமான டாக்டர் V. மோகினி கிரி சமீபத்தில் காலமானார்.
    • 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு, இவர் 1972 ஆம் ஆண்டில் போரினால் கைம்பெண் நிலைமைக்குத் தள்ளப்பட்டவர்கள் என்ற சங்கத்தைத் தொடங்கினார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்