சணல் உற்பத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் வேளாண்மை பற்றிய முக்கிய தகவல்களை வழங்குவதற்காக வேண்டி ஜவுளி அமைச்சகம் ஆனது, “பாத்-மித்ரோ” என்ற கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) அதன் மிக சமீபத்திய சந்திரனுக்கான சந்திரயான்-3 திட்டத்தின் குறிப்பிடத்தக்க வெற்றிக்காக லீஃப் எரிக்சன் லூனார் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ இந்த விருதைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பிற்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படையை (CISF) பணியமர்த்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரான்சு நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்திய நாட்டின் 75வது குடியரசு தின விழாவிற்கான தலைமை விருந்தினராகப் பங்கேற்க உள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் (மென்பொருள்) போட்டியின் மாபெரும் இறுதிப் போட்டியானது போபாலில் IES தொழில்நுட்பக் கல்லூரியின் தலைமை மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், இதில் IES கல்லூரியின் ‘Go Green’ அணி வெற்றி பெற்றது.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் (SIH) என்பது கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவு மேற்கொண்ட நாடு தழுவிய முன்னெடுப்பு ஆகும்.
2023 ஆம் ஆண்டு சர்வதேச கீதா மஹோத்சவமானது ஹரியானாவின் குருக்ஷேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றது.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான சாஸ்த்ரா-ராமானுஜன் விருதுகள் முறையே, பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கணிதவியலாளர்களான யுன்கிங் டாங் மற்றும் ருயிசியாங் ஜாங் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
ஷேக் மிஷால் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா குவைத்தின் புதிய அமீராக அரசியலமைப்பு சார்ந்த பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
கொலராடோ மாநில உச்ச நீதிமன்றமானது 2021 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது தனது ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டிருந்த பங்கு காரணமாக அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் பங்கு பெறுவதிலிருந்து அவரைத் தகுதி நீக்கம் செய்தது.
சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பு (FIBA) ஆனது முதல் உலக கூடைப்பந்து தினத்தை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதியன்று கொண்டாடுகிறது.