TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 30 , 2023 331 days 249 0
  • நிதி ஆயோக் அமைப்பானது சர்வதேச மேம்பாட்டு ஆராய்ச்சி மையம் (IDRC) மற்றும் உலகளாவிய மேம்பாட்டு வலையமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, ‘உலகளாவியப் பொருளாதாரத்திற்கான பசுமை மற்றும் நிலையான மேம்பாட்டு செயல்பட்டு நிரல்’ என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க தேசிய எரிசக்தி வளங்காப்பு விருதானது க்ராம்ப்டன் க்ரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (CGCEL) என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
    • அந்த நிறுவனத்தின் நீர்த் தொட்டி வகை சூடேற்றிச் சாதனங்கள், 2023 ஆம் ஆண்டிற்கான அதிக ஆற்றல் சேமிப்புத் திறன் மிக்க சாதனம் என்ற பிரிவில் இந்த விருதினை பெற்றது.
  • 2023 ஆம் ஆண்டில் உலக அளவில் இந்தியா அழியாத அடையாளத்தினைப் பதித்த பத்து அசாதாரண தருணங்களை படம்பிடித்த காணொளியினை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
    • அதில் சந்திரயான் 3 விண்கலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தரையிறக்கம், இணைய வழி எண்மவழி பணம் செலுத்துதல் நுட்பத்தில் முன்னணி மற்றும் சூரத்தில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டிடம் ஆகியவை அடங்கும்.
  • இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கின் (IONS) 8வது தலைவர்கள் கூட்டமானது (CoC) தாய்லாந்திலுள்ள பாங்காக் நகரில் அந்த நாட்டின் கடற் படையான ராயல் தாய் கடற்படையால் நடத்தப்பட்டது.
  • இந்தியாவின் முன்னாள் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளான டிசம்பர் 25 ஆம் தேதியானது, 2014 ஆம் ஆண்டு முதல் “நல்லாட்சி தினமாக” அனுசரிக்கப்படுகிறது.
  • 1705 ஆம் ஆண்டில் சீக்கிய மதத்தின் 10வது குருவான குரு கோவிந்த் சிங் அவர்களின் இரண்டு ஆண் குழந்தைகளின் மிகப் பெரும் தியாகத்தை நினைவு கூரும் வகையில் டிசம்பர் 26 ஆம் தேதியானது வீர் பால் திவாஸ் என்ற தினமாக அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்