TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 1 , 2024 200 days 325 0
  • வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் கேரள முதல்வர்கள் இணைந்து அதன் நினைவுச் சின்னத்தினைச் சென்னையில் வெளியிட்டனர்.
  • மத்திய அரசானது, நினா சிங்கை மத்தியத் தொழில்துறை பாதுகாப்பு படையின் தலைமை இயக்குனராக நியமித்துள்ளது.
    • இந்த உயர் நிலை படைக்குத் தலைமை தாங்கும் முதல் பெண்மணி என்ற ஒரு பெருமையை அவர் பெற்றுள்ளார்.
  • தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) நிர்வாகத் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை இந்தியக் குடியரசுத் தலைவர் பரிந்துரைத்துள்ளார்.
  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் 99வது சர்வதேச தான்சென் சமரோ நிகழ்வில் சுமார் 1,300 தபேலா கலைஞர்கள் “மிகப்பெரிய தபேலா குழுமத்தில்” பங்கேற்றனர்.
    • இதில் திரட்டப் பட்ட சாதனைக்காக இது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றனர்.
  • விளையாட்டுத் துறை தொழிலதிபர் விடா டானி, சர்வதேச மேசைப் பந்தாட்டக் கூட்டமைப்பின் (ITTF) அறக்கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினராக சேர்க்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • கேரள விவசாயப் பல்கலைக்கழகத்தில் (KAU) பணிபுரியும் இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் ஓய்வு பெற்ற பேராசிரியை P. இந்திரா தேவிக்கு, 2023 ஆம் ஆண்டிற்கான இந்திய வேளாண் பொருளாதாரச் சமூகத்தின் (ISAE) அங்கத்தினர் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
  • இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் வர்த்தக சபையில் புதிதாக நியமிக்கப்பட்ட இயக்குநரான திரு. L.P. ஹேமந்த் K. ஸ்ரீநிவாசுலு என்பவருக்கு, மதிப்புமிக்க “2023 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • அயோத்தி இரயில் சந்திப்புக்கு அயோத்தி தாம் எனப் புதிய பெயர் வழங்கப் பட்டு உள்ளது.
  • ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் முன்னாள் தலைவரும், யூரோ நாணயத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கினை அளித்த நபருமான ஜாகுவெஸ் டெளோர்ஸ் சமீபத்தில் காலமானார்.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பெறப்பட்ட கச்சா எண்ணெய்க்கு இந்திய அரசு முதன்முறையாக ரூபாய் மதிப்பில் பணம் செலுத்தியுள்ளது.
    • இது இந்திய நாணயத்தின் உலகளாவியப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நாட்டின் முன்னெடுப்பில் ஒரு குறிப்பிடத் தக்கப் படி நிலையைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்