TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 7 , 2024 323 days 269 0
  • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் (KMUT) உள்ள அதிகபட்ச பணி சுமை அளவைக் கையாளுவதற்காக 109 கூடுதல் வருவாய்த்துறை அதிகாரிகள் பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வணிகப் பிரிவு ஆனது, முதன் முறையாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஏவுகலம் மூலமாக GSAT-20 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவவுள்ளது.
  • கொச்சி-லட்சத்தீவுகள் நீர்மூழ்கி ஒளியிழை கம்பிவட இணைப்பு (KLI-SOFC) திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
    • இந்தத் திட்டம் ஆனது லட்சத்தீவு மக்களுக்கு 100 மடங்கு வேகமான இணைய சேவையை உறுதி செய்யும்.
  • ஒடிசா மாநிலத்தில் மயூர்பஞ்ச் என்கின்ற மாவட்டத்தைச் சேர்ந்தப் பழங்குடியின மக்களால் சிஞ்சிருக்கான் அல்லது தையற்கார எறும்புகள் கொண்டு செய்யப்பட்ட சிமிலிபால் காய் சட்னி புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.
  • இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) ஆனது, இந்திய நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளின் விரிவான வலையமைப்பிற்காக "பசுமை பரவல் குறியீட்டை" உருவாக்குவதற்காக தேசியத் தொலை உணர்வு மையத்துடன் (NRSC) மூன்று ஆண்டு கால புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது, நெகிழிக் கழிவு அடிப்படையிலான பைரோலிசிஸ் எண்ணெயை, சர்வதேச நிலைத்தன்மை மற்றும் கார்பன் சான்றிதழ் (ISCC)-பிளஸ் திட்டத்தின் சான்றளிக்கப்பட்ட சுழற்சி முறை மீச்சேர்மம் ஆக இரசாயன முறையில் மறுசுழற்சி செய்யும் முதல் இந்திய நிறுவனமாக மாறியுள்ளது.
  • கென்யாவின் பீட்ரைஸ் செபெட், ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற புகழ் பெற்ற கர்சா டெல்ஸ் நாசோஸ் சாலை ஓட்டப் பந்தயத்தில் மகளிருக்கான 5 கி.மீ உலக சாதனையை 14:13* என்ற நேரக் கணக்கில் நிறைவு செய்தார்.
    • 2021 ஆம் ஆண்டில் எத்தியோப்பியாவின் சென்பெரே டெஃபெரி 14:29 என்ற நேரக் கணக்கிலானச் சாதனையானது, மகளிருக்கான போட்டியில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய உலகச் சாதனையாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்