பூந்தமல்லியில் 140 ஏக்கர் நிலப் பரப்பில் 500 கோடி ரூபாய் செலவில் நவீன திரைப்பட நகரம் கட்டமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் M.M. நரவனே, “Four Stars of Destiny” என்றப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவிற்கு 10,000 மெகாவாட் புனல் மின்சாரம் வழங்கச் செய்வதற்காக நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மின்னாற்றல் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
புகழ்பெற்ற வங்காள மொழி எழுத்தாளர் ஷிர்ஷேந்து முகோபாத்யாய்க்கு 2023 ஆம் ஆண்டு குவெம்பு இராஷ்ட்ரிய புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியக் கடற்படை உயர் அதிகாரியான தினேஷ் K. திரிபாதி கடற்படையின் புதிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பர்மிங்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் அட்ரியன் மைக்கேல் குரூஸ், விண்வெளி அறிவியலுக்கான அவரது சேவைகளுக்காக பிரிட்டிஷ் பேரரசின் அதிகாரிகளுக்கான சிறந்த விருது (OBE) என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
குருகிராமில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் உற்பத்தி நிலையம் ஆனது, 'Within the Fence' பிரிவில் முதல் இடத்தைப் பெற்று நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குவதற்காக இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் தேசிய விருதைப் பெற்று உள்ளது.