TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 12 , 2024 318 days 336 0
  • இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் (IWAI) ஆனது, சமீபத்தில் அமைக்கப்பட்ட உள்நாட்டு நீர்வழிகள் மேம்பாட்டு சபையின் (IWDC) முதல் கூட்டத்தை கொல்கத்தாவில் நடத்துகிறது.
  • SVAMITVA திட்டமானது, 2023 ஆம் ஆண்டு மின் ஆளுகைக்கான தேசிய விருது விழாவில் "குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்குவதற்காக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்" என்ற பிரிவில் மிகவும் மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
  • ‘பிரசாதம்’ எனப்படும் இந்தியாவின் முதல் ஆரோக்கியமான & சுகாதாரமான உணவு விற்பனைத் தெரு மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் திறக்கப்பட்டுள்ளது.
  • அசாம் மாநில அரசாங்கம் ஆனது, முழுவதும் மின்சார இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் 'பாயு' என்ற செயலி அடிப்படையிலான வாடகை வாகனச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • கேரளாவைச் சேர்ந்த சுசேதா சதீஷ் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நடைபெற்ற பருவநிலைக்கான இசை நிகழ்ச்சி என்ற நிகழ்வின் போது மொத்தம் 140 மொழிகளில் பாடல்கள் பாடினார்.
    • இதற்காக அவர் கின்னஸ் உலக சாதனை விருதினைப் பெற்றுள்ளார்.
  • இந்தியாவின் மூத்த அரசு முறை அதிகாரியான இந்திராமணி பாண்டே BIMSTEC அமைப்பின் பொதுச் செயலாளராக (SG) பொறுப்பேற்றுள்ளார்.
  • AI Odyssey என்ற புதியதொரு முன்னெடுப்பினை மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கி உள்ளது.
    • இந்தியாவில் 1,00,000 நிரலாக்க வல்லுநர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதற்காக இது வடிவமைக்கப்பட்டது.
  • ONGC நிறுவனம் ஆனது, வங்காள விரிகுடாவின் காக்கிநாடா கடற்கரையில் அமைந்த கிருஷ்ணா கோதாவரி நதிப்படுகை சார்ந்த கடல்சார் KG-DWN 98/2 தொகுதியில் தனது ‘முதல் எண்ணெய் உற்பத்தியை’ தொடங்கியுள்ளது.
  • கேப்ரியல் அட்டல் பிரான்சு நாட்டின் இளம் மற்றும் முதல் தன்பாலினச்சேர்க்கை வழக்கம் கொண்ட பிரதமரானார்.
    • அவர் பிரான்ஸ் நாட்டின் இரண்டாம் பெண் பிரதமரான எலிசபெத் போர்னே என்பவருக்கு மாற்றாக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • 2024 ஆம் ஆண்டு டென்னிஸ் ஐக்கிய கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டியில் போலந்து அணியைத் தோற்கடித்து ஜெர்மனி அணி கோப்பையினை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்