உலக சுகாதார அமைப்பானது, 11வது சர்வதேச நோய்கள் வகைப்பாட்டுத் (ICD) தொடரின் 2 வது பாரம்பரிய மருத்துவத் தொகுதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருத்துவத்தில் கூறப்படும் நோய்கள் தொடர்பான தரவு மற்றும் சொற்கூறுகள் உலக சுகாதார அமைப்பின் ICD-11 வகைப்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்திய அரசானது, யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியக் குழுவின் 46வது அமர்வினை முதன்முறையாக புது டெல்லியில் நடத்தி அதற்கு தலைமை தாங்க உள்ளது.
மத்திய அரசானது, ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வர்த்தக அமைப்பின் (WTO) அரசுத் தூதராக இந்தியக் குடிமைப் பணி அதிகாரி C. செந்தில் பாண்டியன் அவர்களை நியமித்துள்ளது.
ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்த திவ்யகிருதி சிங் குதிரையேற்றப் போட்டி விளையாட்டுகளில் அர்ஜுனா விருது பெற்ற முதல் இந்தியப் பெண்மணி ஆனார்.