TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 14 , 2024 187 days 190 0
  • உலக சுகாதார அமைப்பானது, 11வது சர்வதேச நோய்கள் வகைப்பாட்டுத் (ICD) தொடரின் 2 வது பாரம்பரிய மருத்துவத் தொகுதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருத்துவத்தில் கூறப்படும் நோய்கள் தொடர்பான தரவு மற்றும் சொற்கூறுகள் உலக சுகாதார அமைப்பின் ICD-11 வகைப்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இந்திய அரசானது, யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியக் குழுவின் 46வது அமர்வினை முதன்முறையாக புது டெல்லியில் நடத்தி அதற்கு தலைமை தாங்க உள்ளது.
  • மத்திய அரசானது, ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வர்த்தக அமைப்பின் (WTO) அரசுத் தூதராக இந்தியக் குடிமைப் பணி அதிகாரி C. செந்தில் பாண்டியன் அவர்களை நியமித்துள்ளது.
  • ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்த திவ்யகிருதி சிங் குதிரையேற்றப் போட்டி விளையாட்டுகளில் அர்ஜுனா விருது பெற்ற முதல் இந்தியப் பெண்மணி ஆனார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்