TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 17 , 2024 184 days 162 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (IIT-M) மற்றும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) ஆகியவை ஹைட்ரஜன் தொடர்பான புத்தாக்க மையத்தினை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • தீபா பண்டாரே, வசந்ததாதா சர்க்கரை உற்பத்தி நிறுவனத்தின் சிறந்த சுற்றுச்சூழல் அதிகாரி விருதை வென்று, மகாராஷ்டிராவின் சர்க்கரை உற்பத்தித் துறையில் இந்தப் பெருமையைப் பெற்ற ஒரே பெண்மணி என்ற வரலாற்றினைப் படைத்துள்ளார்.
  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது, ‘ஒரு வாகனம், ஒரு FASTag’ முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
    • எந்தவொரு வாகனமும் பல FASTag குறியீடுகளைப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
  • 27வது தேசிய இளையோர் விழா (NYF) ஆனது, மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் நடைபெற்றது.
    • இதில் நாடு முழுவதிலுமிருந்து பதினைந்து இளைஞர்களுக்கு 2020-2021 ஆம் ஆண்டிற்கான தேசிய இளையோர் விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்