TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 19 , 2024 311 days 257 0
  • ராஜஸ்தானின் பிகானேர் நகரில் மூன்று நாட்கள் அளவிலான சர்வதேச ஒட்டகத் திருவிழா நடைபெற்றது.
  • இந்திய மற்றும் ஜப்பானியக் கடலோரக் காவல்படையினர் 'சஹ்யோக் கைஜின்' என்ற கூட்டுப் பயிற்சியை சமீபத்தில் சென்னையின் கடற்கரையில் வெற்றிகரமாக மேற் கொண்டன.
  • இந்தியக் கடற்படை மற்றும் தாய்லாந்து நாட்டுக் கடற்படை (RTN) ஆகியவை இணைந்து 'எக்ஸ்-ஆயுத்தயா' என்ற முதலாவது இருதரப்புப் பயிற்சியை மேற் கொண்டன.
    • இந்தப் பெயர் இந்தியாவில் உள்ள 'அயோத்தி', தாய்லாந்தில் உள்ள ஆயுத்தயா ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.
  • உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலென்ஸ்கியின் வேண்டுகோளுக்கு இணங்க உக்ரைன் நாட்டில் உலகளாவிய அமைதி மாநாட்டை நடத்த சுவிட்சர்லாந்து அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
  • ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள பாலசமுத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு கழகத்தின் (NACIN) புதிய வளாகம் ஆனது திறக்கப்பட்டுள்ளது.
  • கட்ச் பகுதியின் பூர்வீகப் பேரீச்சம்பழ வகையான கச்சி காரேக், குஜராத் மாநிலத்தில் புவிசார் குறியீடு பெற்ற இரண்டாவது பழ வகையாக மாறியுள்ளது.
  • 2011 ஆம் ஆண்டில், கிர் கேசர் மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப் பட்டது.
  • ஜனவரி 14 ஆம் தேதியன்று, உலக நாடுகள் உலக தர்க்க தினத்தைக் கொண்டாடியது.
    • இத்தினமானது காரணம், பகுத்தறிவு மற்றும் திறனாய்வுச் சிந்தனையின் மூலக் கல்லாக தர்க்கம் விளங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக ஒரு கௌரவ வழங்கீட்டுத் தினமாக 2019 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்