தென்னிந்தியாவில் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் முதல் முறையாக நடத்தப்படுகிறது.
சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை ஆகிய தமிழ்நாட்டின் நான்கு நகரங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
தேசிய லிக்னைட் கழக இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆனது, எண்ணிமப் பரிமாற்றப் பிரிவில் பொது நிறுவனங்களிளுக்கான நிலையான மாநாடு (SCOPE) என்ற அமைப்பின் உயர்நிலை விருதைப் பெற்றுள்ளது.
SCOPE எனப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் உச்ச அமைப்பினால் இந்த விருது நிறுவப் பட்டது.
அயோத்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள இராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, உலகின் மிகப்பெரியதாக அறிவிக்கப்பட்ட 300 அடி விளக்கு, நகரில் ஒளிரச் செய்யப் பட உள்ளது.
MPLAD திட்டத்தின் கீழ் திருத்தியமைக்கப்பட்ட நிதி வழங்கீட்டு நடைமுறைக்காக e-SAKSHI என்ற கைபேசிச் செயலி சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
டாடா ஆலோசனை வழங்கீட்டு நிறுவனம் ஆனது பிராண்ட் ஃபைனான்ஸ் என்ற நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டு உலகளாவிய 500 தகவல் தொழில்நுட்பச் சேவைகள் தர வரிசையின்படி, இரண்டாவது மதிப்புமிக்க தகவல் தொழில்நுட்பச் சேவை வழங்கீட்டு நிறுவனமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
40.5 பில்லியன் டாலர் நிறுவன மதிப்புடன், அசென்சர் நிறுவனமானது உலகின் மிக மதிப்பு மிக்க தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கீட்டு நிறுவனமாக தொடர்ந்து இடம் பெற்றுள்ளது.
இந்தியாவின் முதல் கிராபீன் புத்தாக்க மையம் IICG ஆனது கொச்சியில் அமைந்துள்ள உற்பத்தி ஊக்குவிப்பு மையத்தில் (மேக்கர்ஸ் வில்லேஜ்) நிறுவப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஆனது, சாம்சங் நிறுவனத்தினை முந்தி இந்தத் தொழில்துறையில் முன்னணியில் இருந்து வந்த கொரியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் 12 ஆண்டுகால முன்னணித்துவத்தினை முடிவுக்குக் கொண்டு வந்து உலகின் முன்னணி திறன் பேசி விற்பனையாளராகத் திகழ்கிறது.