TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 29 , 2024 172 days 182 0
  • பிரான்சில் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் டி பிரான்ஸ் ஹென்றி டெக்லேன் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா வெண்கலப் பதக்கத்தினை வென்று உள்ளார்.
  • சைக்ளோன் எனப்படும் 2வது இந்தியா-எகிப்து கூட்டு சிறப்புப் படைப் பயிற்சி ஆனது எகிப்தின் அன்ஷாஸ் என்னுமிடத்தில் நடைபெற்று வருகிறது.
  • கஞ்சர் எனப்படும் 11வது இந்தியா-கிர்கிஸ்தான் கூட்டு சிறப்புப் படை பயிற்சியானது, இமாச்சலப் பிரதேசத்தின் பக்லோ என்னுமிடத்தில் தொடங்கியுள்ளது.
  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், ஐந்தாண்டு நிதிநிலை அறிக்கைகள் மற்றும் ஒரு இடைக்கால நிதிநிலை அறிக்கை உட்பட தொடர்ந்து ஆறாவது நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்து வரலாறு படைக்க உள்ளார்.
    • முன்னதாக இந்தச் சாதனையினை முன்னாள் பிரதமரான மொரார்ஜி தேசாய் மட்டுமே எட்டியுள்ளார்.
  • தென் கொரியாவில், மெத்தனால் மூலம் இயக்கப்படும் உலகின் முதல் பெரிய கொள்கலன் கப்பலுக்கு "அனே மேர்ஸ்க்" என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • சவூதி அரேபியா நாடானது, தனது தலைநகர் ரியாத்தில் முஸ்லீம் அல்லாத அரசுமுறை அதிகாரிகளுக்கு மட்டும் பிரத்தியேகமாக சேவை வழங்கும் தனது முதல் மதுபானக் கடையைத் திறக்கத் தயாராகி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்