TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 30 , 2024 171 days 198 0
  • ஆர்மடோ எனப்படுகின்ற இந்தியாவின் முதல் கவசமிடப்பட்ட மிதரக சிறப்புப் பயன்பாட்டு வாகனம் (ALSV) ஆனது 2024 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் அறிமுகப் படுத்தப்பட்டது.
    • இது இந்திய ஆயுதப் படைகளுக்காக மஹிந்திரா பாதுகாப்பு அமைப்புகள் நிறுவனத்தினால், முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைத்துக் கட்டமைக்கப்பட்ட வாகனமாகும்.
  • சந்தை மூலதனத்தின் அடிப்படையில் உலகளாவியப் பங்குச் சந்தைத் தரவரிசையில் ஹாங்காங்கை முந்தி இந்தியா நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
    • ஹாங்காங்கின் 4.29 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மூலதனத்தை விஞ்சி, இந்தியாவின் சந்தை மூலதன மதிப்பு 4.33 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது.
  • மீன்வள மேலாண்மை மீதான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் FAO COFI (மீன்வளம் குறித்த குழு) துணைக் குழுவின் முதல் துணைத் தலைமைப் பொறுப்பிற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
    • 57 ஆண்டுகளில் முதன்முறையாக 'மீன் பிடிப்பு' குறித்த உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மீன்வள வாரியத்தின் உறுப்பினராக இந்தியா பணியாற்ற உள்ளது.
  • இயங்கலை தனியுரிமை, தரவுப் பாதுகாப்பு மற்றும் எண்ணிம உலகில் நமது தனிப் பட்டத் தகவல்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தவதற்காக ஜனவரி 28 ஆம் தேதியன்று தரவு தனியுரிமை தினம் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்