TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 5 , 2024 165 days 251 0
  • தமிழ்நாடு மாநிலம் ஆனது அதிகபட்ச ராம்சர் தளங்களைக் கொண்டுள்ள (16 தளங்கள்) மாநிலமாகத் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது, அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (10 தளங்கள்) இடம் பெற்றுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் ‘ஜனநாயகத்தின் தாய்' என்று பெயரிடப் பட்ட கலாச்சார அமைச்சகத்தின் அணிவகுப்புக் காட்சி வாகனம் ஆனது முதல் பரிசைப் பெற்றுள்ளது.
  • ஒடிசா அரசு ஆனது, உலகிலேயே முதல் முறையாக கரு நிறமிகள் அதிகம் கொண்ட புலிகளை (கரும்புலிகள்) காண்பதற்காக சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வகையிலான பூங்காவினை சிமிலிபால் புலிகள் வளங்காப்பகத்தில் நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது.
    • சிமிலிபால் புலிகள் வளங்காப்பகம் தான் உலகிலேயே காட்டினுள் கரு நிறமிகள் கொண்ட புலிகளுக்குத் தாயகமாக உள்ளதாகும்.
  • சாம்பியன் பட்டம் பெற்ற நேர் எறிதட்டு சுடுதல் வீராங்கனை ஆன ஹவில்தார் ப்ரீத்தி ரஜக், இந்திய இராணுவத்தில் சுபேதார் பதவியை வகிக்க தகுதி பெற்ற முதலாவது பெண்மணி என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • 84வது அகில இந்திய தலைமை அதிகாரிகள் மாநாடு மும்பையில் நடைபெற்றது.
  • இரயில்வே வாரியத்தின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அனில் குமார் லஹோட்டி இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகள் இணைந்து அரபிக்கடலில் 'டெசர்ட் நைட்' எனப்படும் மாபெரும் விமானப் படைப் பயிற்சியை மேற்கொண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்