TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 6 , 2024 164 days 175 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, அடுத்த கல்வியாண்டு முதல் தனது இளங்கலைப் படிப்புகளில் விளையாட்டுத் துறை சார்ந்த இட ஒதுக்கீடுகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
    • நாட்டிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகங்களில் அறிமுகப்படுத்தப் படும் இத்தகைய முதலாவது முன்னெடுப்பானது, ‘விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான கல்விச் சேர்க்கையில்’ இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது.
  • ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) கட்சித் தலைவர் சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் பன்னிரண்டாவது முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
  • பெங்களூருவில் அமைந்துள்ள டைம்டூத் எனப்படும் பொறியியல் நிறுவனம் ஆனது, 2024 ஆம் ஆண்டு விங்ஸ் இந்தியா நிகழ்ச்சியில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் பயணிகள் விமான இருக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு முறை பதக்கம் வென்ற நௌரெம் ரோஷிபினா தேவி, சர்வதேச வுஷு கூட்டமைப்பின் (IWUF) விருதுகளுக்கான சாண்டா (வெவ்வேறு எடைப் பிரிவு) பிரிவில் ஆண்டின் சிறந்தப் பெண் தடகள வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • இந்த ஆண்டு அவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
  • ஆசியக் கிரிக்கெட் வாரியத் தலைவராக உள்ள இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷாவின் பதவிக் காலம் ஆனது மூன்றாவது முறையாக ஒருமனதாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • 2வது மாநிலச் சுரங்கத்துறை அமைச்சர்கள் மாநாடு ஆனது மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நகரில் நடைபெற்றது.
  • இந்திய அரசானது குஜராத்தின் சூரத் விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக அறிவித்துள்ளது.
  • தகவல் தொடர்பு அமைச்சகத்தின் (MoC) கீழ் உள்ள தொலைத்தொடர்புத் துறையானது (DoT), '2024 ஆம் ஆண்டு பாரத் தொலைத்தொடர்பு கண்காட்சியின்' போது "பாரத் 5G இணைய தளம் எனும் ஓர் ஒருங்கிணைந்த இணைய தளத்தினை" அறிமுகப் படுத்தி உள்ளது.
  • நிதி ஆயோக் அமைப்பு, வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் (MoA&FW), மற்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) ஆகியவை இணைந்து இந்தியாவில் பருவநிலை நெகிழ்திறன் கொண்ட வேளாண் உணவு முறைகளை மேம்படுத்தச் செய்வதற்கான முதலீட்டு மன்றத்தைத் தொடங்கியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்