ஜப்பானிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா 2023 ஆம் ஆண்டில் 11 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை விற்று, உலகிலேயே அதிக வாகன விற்பனை மேற்கொண்ட வாகனத் தயாரிப்பு நிறுவனமாக மாறியுள்ளது.
THDC இந்தியா லிமிடெட் நிறுவனமானது, உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ் நகரில் நாட்டின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி சோதனைத் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்தியாவின் முதல் கடற்கரைசார்ந்த புத்தொழில் நிறுவனங்கள் விழாவான -Emerge 2024 என்ற திருவிழாவானது மங்களூருவில் உள்ள தண்ணீர்பவி என்ற கடற்கரையில் நடைபெறவுள்ளது.
லால் கிருஷ்ண அத்வானி இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார்.
வரவிருக்கும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு டிஜிட்டல் வழி ஷெங்கன் நுழைவு இசைவுச் சீட்டு வழங்கும் முதல் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாற உள்ளது.