TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 7 , 2024 163 days 191 0
  • ஜப்பானிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா 2023 ஆம் ஆண்டில் 11 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை விற்று, உலகிலேயே அதிக வாகன விற்பனை மேற்கொண்ட வாகனத் தயாரிப்பு நிறுவனமாக மாறியுள்ளது.
  • THDC இந்தியா லிமிடெட் நிறுவனமானது, உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ் நகரில் நாட்டின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி சோதனைத் திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • இந்தியாவின் முதல் கடற்கரைசார்ந்த புத்தொழில் நிறுவனங்கள் விழாவான - Emerge 2024 என்ற திருவிழாவானது மங்களூருவில் உள்ள தண்ணீர்பவி என்ற கடற்கரையில் நடைபெறவுள்ளது.
  • லால் கிருஷ்ண அத்வானி இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார்.
  • வரவிருக்கும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு டிஜிட்டல் வழி ஷெங்கன் நுழைவு இசைவுச் சீட்டு வழங்கும் முதல் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்