TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 8 , 2024 162 days 183 0
  • மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய அறங்காவலர் குழுவின் புதிய தலைவராக S. ருக்மணி பழனிவேல் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நறுமணப் பொருட்கள் மற்றும் சமையல் நறுமண மூலிகைகளுக்கான கோடெக்ஸ் குழுவானது (CCSCH) அதன் 7வது அமர்வை கேரளாவின் கொச்சியில் நடத்தியது.
  • மத்தியப் புவியியல் சார் நிரலாக்க வாரியத்தின் 63வது கூட்டமானது மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரில் நடைபெற்றது.
  • 878 நாட்கள் அல்லது ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, விண்வெளியில் அதிக நேரம் செலவழித்த ரஷ்ய விண்வெளி வீரர் என்ற உலகச் சாதனையினை ஒலேக் கோநோன்னேன்கோ என்பவர் படைத்துள்ளார்.
  • ஐரோப்பிய ஒன்றியமானது, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் கையாளப்படும் நடவடிக்கைகளையும் குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் குழுக்களின் மைய நடவடிக்கை பகுதிகளின் பரவலை எதிர்த்துப் போராடச் செய்வதற்குமான நடவடிக்கைகளையும் ஒத்திசைப்பதற்கும் "ஐரோப்பிய துறைமுகக் கூட்டணி" ஒன்றைத் தொடங்கியுள்ளது.
  • முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் ஃபரோக் எஞ்சினியர் மற்றும் ஆல்-ரவுண்டர் ரவி சாஸ்திரி ஆகியோருக்கு கர்னல் C.K. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்