TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 9 , 2024 161 days 281 0
  • இந்தியாவின் பெண் எந்திர மனித விண்வெளி வீராங்கனையான வியோமித்ராவின் விண்வெளி பயணம் ஆனது இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் திட்டமிடப்பட்டு உள்ளது.
  • கடற்படை வீரர்கள் சார்ந்த நிர்வாகம், செயல்திறன் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக இந்தியக் கடற்படையானது 2024 ஆம் ஆண்டினை 'கடற்படை வீரர்களைச் சார்ந்த மக்களின் ஆண்டாக' அறிவித்துள்ளது.
  • மோடி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் பினா மோடிக்கு '2023 ஆம் ஆண்டின் சிறந்த வணிகப் பெண்மணி' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
  • பிராண்ட் ஃபைனான்ஸால் தொகுக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டு நிறுவனக் காப்பாளர்கள் (நிறுவனத்தின் வணிக மதிப்பினை நிலையான முறையில் கட்டமைத்துக் காக்கும் தலைமை நிர்வாக அதிகாரி) குறியீட்டில் முகேஷ் அம்பானி இந்திய அளவில் முதல் இடத்தையும், உலக அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளார்.
  • இந்தியாவில் வடகிழக்குப் பகுதியின் முதல் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனையானது அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது.
  • ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் சார்ந்த பரிவர்த்தனைகள் ஆனது ஜனவரி மாதத்தில் 18.41 டிரில்லியன் ரூபாய் மதிப்பினை எட்டி, பரிவர்த்தனை மதிப்பின் அடிப்படையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
  • ஆயுதங்கள் பொருத்தப்பட்ட MQ-9B ஸ்கைகார்டியன் எனப்படும் 31 ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் சார்பு உபகரணங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
  • கனடா நாட்டில், ஒவ்வோர் ஆண்டின் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரம் முழுவதும் சர்வதேச வளர்ச்சி வாரம் (IDW) ஆக நினைவு கூரப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்