இந்தியாவின் பெண் எந்திர மனித விண்வெளி வீராங்கனையான வியோமித்ராவின் விண்வெளி பயணம் ஆனது இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் திட்டமிடப்பட்டு உள்ளது.
கடற்படை வீரர்கள் சார்ந்த நிர்வாகம், செயல்திறன் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக இந்தியக் கடற்படையானது 2024 ஆம் ஆண்டினை 'கடற்படை வீரர்களைச் சார்ந்த மக்களின் ஆண்டாக' அறிவித்துள்ளது.
மோடி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் பினா மோடிக்கு '2023 ஆம் ஆண்டின் சிறந்த வணிகப் பெண்மணி' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
பிராண்ட் ஃபைனான்ஸால் தொகுக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டு நிறுவனக் காப்பாளர்கள் (நிறுவனத்தின் வணிக மதிப்பினை நிலையான முறையில் கட்டமைத்துக் காக்கும் தலைமை நிர்வாக அதிகாரி) குறியீட்டில் முகேஷ் அம்பானி இந்திய அளவில் முதல் இடத்தையும், உலக அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளார்.
இந்தியாவில் வடகிழக்குப் பகுதியின் முதல் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனையானது அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது.
ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் சார்ந்த பரிவர்த்தனைகள் ஆனது ஜனவரி மாதத்தில் 18.41 டிரில்லியன் ரூபாய் மதிப்பினை எட்டி, பரிவர்த்தனை மதிப்பின் அடிப்படையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஆயுதங்கள் பொருத்தப்பட்ட MQ-9B ஸ்கைகார்டியன் எனப்படும் 31 ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் சார்பு உபகரணங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
கனடா நாட்டில், ஒவ்வோர் ஆண்டின் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரம் முழுவதும் சர்வதேச வளர்ச்சி வாரம் (IDW) ஆக நினைவு கூரப்படுகிறது.