TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 10 , 2024 160 days 237 0
  • காமன்வெல்த் சட்டக் கல்வி சங்கத்தின் (CLEA) 2024 ஆம் ஆண்டு காமன்வெல்த் வழக்கறிஞர்கள் மற்றும் அரசுத் தலைமை வழக்கறிஞர்கள் பொது மாநாடு (CASGC) ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
    • இந்த நிகழ்வின் கருத்துரு, "பல்வேறு நாடுகளுக்கிடையே நீதி வழங்குவதில் உள்ள சவால்கள்" என்பதாகும்.
  • முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா வர உள்ள 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதியை ஏந்திச் செல்லும் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • ஈபிள் டவர் தற்போது ஐரோப்பாவில் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் (யுபிஐ) மூலமாக கட்டணங்களை ஏற்கும் முதல் தளமாக மாறியுள்ளதன் மூலம், ஐரோப்பியக் கண்டத்தில் இந்த எண்ணிம பண வழங்கீட்டுச் செயல்முறையை ஏற்றுக் கொண்ட முதல் நாடாக பிரான்ஸ் திகழ்கிறது.
  • நுகர்வோருக்கு நன்மை பயக்கும் வகையில், ஒரு கிலோ 29 ரூபாய் என்ற விலை வீதத்தில் பாரத் அரிசி வகையின் சில்லறை விற்பனையை அரசாங்கம் விரைவில் தொடங்கவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்