கடற்பாசி சாகுபடியை ஊக்குவிப்பதற்கான தேசிய மாநாடு ஆனது குஜராத் மாநிலம் கட்ச் நகரில் நடைபெற்றது.
டாடா அறக்கட்டளை நிறுவனமானது இந்தியாவின் முதல் அதிநவீன சிறிய விலங்குநல மருத்துவமனையை மும்பையின் மகாலக்ஷ்மி நகரில் தொடங்க உள்ளது.
டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (AIIMS) ஆனது, மார்பகம் மற்றும் கருப்பைப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய உதவும் iOncology.ai. எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா சேவைக் கழகம் ஆனது, சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இராமாயணச் சுற்று வட்டாரச் சுற்றுலாச் சேவை இரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த 18 நாட்கள் அளவிலான பயணம் ஆனது டெல்லியில் இருந்து தொடங்கி, அயோத்தி, ஜனக்பூர் (நேபாளம்), சீதாமர்ஹி, வாரணாசி, நாசிக், இராமேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களை உள்ளடக்கியதாகும்.
உலக வங்கியின் தளவாடங்கள் செயல்திறன் குறியீட்டு அறிக்கையில் (2023) இடம் பெற்ற 139 நாடுகளில் இந்தியா 38வது இடத்தினைப் பெற்றுள்ளது.
இப்பட்டியலில் இந்தியாவின் தரநிலையானது 2018 ஆம் ஆண்டில் 44வது இடத்தில் இருந்து ஆறு இடங்களும், 2014 ஆம் ஆண்டில் 54வது இடத்தில் இருந்து பதினாறு இடங்களும் முன்னேறியுள்ளது.
2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட மாநில அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் நடைமுறைப்படுத்துவதாக சிக்கிம் மாநில அரசு அறிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களுள் இந்த முடிவை அமல்படுத்திய முதல் மாநிலம் இதுவாகும்.
கூகுள் நிறுவனமானது பார்டு எனப்படும் தனது செயற்கை நுண்ணறிவு உரையாடு மென்பொருளின் பெயரை ஜெமினி என மாற்றியுள்ளது.
துபாய் நாடானது 2024 ஆம் ஆண்டு உலக அரசாங்கங்களின் உச்சி மாநாட்டினை ‘எதிர்கால அரசாங்கங்களை வடிவமைத்தல்’ என்ற கருத்துருவின் கீழ் நடத்தியது.
அது இந்தியா, துருக்கி மற்றும் கத்தார் ஆகிய நாடுகளை அந்த மாநாட்டின் கௌரவ விருந்தினர்களாக நியமித்தது.
நார்வேயின் டெலினர் நிறுவனமானது, அண்டார்டிகாவில் உலகின் தென்கோடியில் அமைந்த தொலைபேசி சேவை வழங்கீட்டு நிலையத்தினைத் தொடங்கியுள்ளது.
இது முதல் முறையாக முழுவதும் உறைந்த இந்த கண்டத்தின் ஒரு முனையில் தொடர் தொலைபேசி தொடர்பு சேவைகளைக் கொண்டுவருகிறது.
வங்க தேசத்தில் நடந்த SAFF 19 வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் கால்பந்து போட்டித் தொடரின் கூட்டு வெற்றியாளர்களாக இந்தியா மற்றும் வங்காளதேசம் அறிவிக்கப் பட்டு உள்ளன.