சிந்து கணபதி (37) என்பவர், தெற்கு இரயில்வே நிர்வாகத்தின் முதல் திருநங்கை பயணச் சீட்டு பரிசோதகராக (TTE) நியமிக்கப்பட்டுள்ளார் (திண்டுக்கல்லில் பணியில் அமர்த்தப் பட்டுள்ளார்).
இந்தியக் குடியரசுத் தலைவர், ஆண்டுதோறும் நடைபெறும் ஆதி மஹோத்சவ் 2024 எனப்படும் தேசியப் பழங்குடியினர் திருவிழாவினைப் புது டெல்லியில் தொடங்கி வைத்தார்.
23வது உலக நிலையான மேம்பாட்டு உச்சி மாநாடானது புது டெல்லியில் உள்ள ஆற்றல் மற்றும் வளங்கள் ஆய்வு நிறுவனத்தினால் (TERI) ஏற்பாடு செய்யப்பட்டது.
உலகளாவிய வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பின் (GNSS) அடிப்படையிலான குறுக்கீடுகள் குறைவான எவ்வித தடையுமின்றி சுங்க வரி வசூலிப்பு மேற்கொள்ளும் முறையானது, 10-வழித்தட மைசூரு-பெங்களூரு விரைவுச்சாலையில் (நெடுஞ்சாலை) கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் என்ற அடிப்படையில் ஒரு சோதனைத் திட்டமாக செயல் படுத்தப் பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியானது, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு 19 வயதிற்குட்பட்டோருக்கான ICC உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியினை வீழ்த்தி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் தனது நான்காவது பட்டத்தை வென்றுள்ளது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ICC ஆடவர் டெஸ்ட் போட்டியின் பந்துவீச்சு தரவரிசையில் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆனார்.