TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 19 , 2024 151 days 235 0
  • தெலுங்கானா சட்டமன்றம் ஆனது, மாநிலம் முழுவதும் விரிவான குடும்பவாரியான சாதி வாரிக் கணக்கெடுப்பினை மேற்கொள்வதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.
    • பீகார் மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை அடுத்து இது மூன்றாவது மாநிலமாகும்.
  • அருணாச்சலப் பிரதேச மாநிலம் ஆனது, ஜல் ஜீவன் திட்டத்தின் (JJM) கீழ் அந்த மாநிலத்தின் 98 சதவீத வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் சேவை வழங்கி வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.
    • இதனை எட்டும் முதல் வடகிழக்கு மாநிலம் இதுவே ஆகும்.
  • இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் மூலமான அவசர மருத்துவச் சேவை (HEMS) ஆனது உத்தரகாண்டில் தொடங்கப்பட உள்ளது.
    • விபத்துக்குள்ளான எந்தவொரு நபரையும் சுமார் 150 கி.மீ. சுற்றளவில் அமைந்த எந்தவோரு மருத்துவமனைக்கும் விமானத்தில் ஏற்றிச் செல்வதற்காக எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் இது அனுப்பப் படும்.
  • கொச்சின் சர்வதேச விமான நிலைய லிமிடெட் (CIAL) நிறுவனமானது கொச்சி விமான நிலைய வளாகத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலையை அமைப்பதற்காக BPCL நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
    • இது ஒரு விமான நிலையத்திற்குள் அமைந்துள்ள உலகின் முதல் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை மற்றும் எரிபொருள் நிலையம் ஆக விளங்கும்.
  • தற்போதைய மாரத்தான் உலகச் சாதனையாளர் கெல்வின் கிப்டம் மற்றும் அவரது பயிற்சியாளர் கெர்வைஸ் ஹகிசிமானா ஆகியோர் சமீபத்தில் கென்யா நாட்டில் உயிரிழந்தனர்.
  • துபாய் அரசு ஆனது, 2026 ஆம் ஆண்டிற்குள் உலகிலேயே முதல் முறையாக நகர முழுவதுமான மின்சார வான்வழி வாடகை வாகனச் சேவைகள் மற்றும் வான்வழி வாடகை வாகன நிலையங்கள் (வெர்டிபோர்ட்) வலையமைப்புகளை உருவாக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்