இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடு பதவியேற்று தனது முதல் ஆண்டை சமீபத்தில் நிறைவு செய்தார். இவர் இந்தப் பதவிக் காலத்தில் நாட்டின் 29 மாநிலங்களில் 28 மாநிலத்திற்கு பயணம் செய்து இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர்களில் ஒருவராக சாதனை படைத்துள்ளார்.
உரத்தொழிலில் முக்கிய நிறுவனமான IFFCO ஆனது காங்கிலடோஸ் டி நவாரா என்ற நிறுவனத்துடன் இணைந்து பஞ்சாபின் லூதியானாவில் உணவு பதப்படுத்துதல் ஆலையை அமைக்கவிருக்கிறது. இந்தக் கூட்டிணைவின் மூலம் கூட்டுறவு நிறுவனமான IFFCO ஆனது உணவு பதப்படுத்துதல் துறையில் முதல்முறையாக ஈடுபடுகிறது.
நிதி ஆயோக் ஆனது உள்துறை அமைச்சகம் மற்றும் அந்தமான் & நிகோபார், லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களின் நிர்வாகங்களுடன் இணைந்து அத்தீவுகளின் முழுமையான வளர்ச்சிக்காக முதலீட்டாளர்கள் மாநாட்டை புதுடெல்லி, பிரவாசி பாரதீய கேந்திராவில் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த மாநாட்டை நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியான அமிதாப் காந்த் தொடங்கி வைத்தார்.