TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 22 , 2024 148 days 268 0
  • இந்தியக் கடற்படையின் மிகப்பெரிய பலதரப்புக் கடற்படைப் பயிற்சியான மிலன் 2024 என்ற பயிற்சியானது ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
  • வேம்பு உச்சி மாநாடு மற்றும் உலகளாவிய வேம்பு வர்த்தக கண்காட்சி ஆனது, ஜான்சி நகரில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் மத்திய வேளாண் வனவியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து புது டெல்லியில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • 60வது முனிச் பாதுகாப்பு மாநாடு ஆனது ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்றது.
    • சர்வதேசப் பாதுகாப்புச் சமூகத்திற்குள் தொடர்ச்சியான, முறையாக ஏற்பாடு செய்யப் பட்ட மற்றும் முறைசாராப் பேச்சுவார்த்தைகளைத் தக்க வைத்துக் கொள்வதன் மூலம் நம்பிக்கையை கட்டமைப்பதற்கும், மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கும் பங்களிப்பதையும் இது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்