TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 16 , 2018 2165 days 661 0
  • இந்திய தரக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நாட்டில் ராஜஸ்தானில் உள்ள இரயில் நிலையங்கள் தூய்மையானதாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் ஜோத்பூர் ரயில் நிலையம் முதல் இடத்தில் உள்ளது.
  • ஐதராபாத், நேரு விலங்கியல் பூங்காவில் அழிந்து வரும் உயிரினங்களுக்கான ஆய்வகத்தில் மரபியல் ஆதார சேமிப்பு வசதியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷவர்தன் திறந்து வைத்தார்.
  • அடுத்த வருட துவக்கத்தில் செலுத்தப்படவிருக்கும் சந்திரயான் - 2 திட்டத்தின் கோள் இறங்குவிண்கலத்திற்கு (Lander) இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையான விக்ரம் சாரா பாயின் பெயரான ‘விக்ரம்‘ என்ற பெயர் சூட்டப்பட உள்ளது.
  • பஞ்சாப் மாநில அரசு சொத்துப் பதிவு செய்வதற்கான ‘தட்கல் சேவையை' அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தியாவின் மற்ற 28 மாநிலங்களில் முதன்முறையாக சத்தீஸ்கர், மாநில இளைஞர் மேம்பாட்டிற்காக ‘திறன் மேம்பாட்டு உரிமையை‘ வழங்கியுள்ளது.
  • வரலாற்றில் முதன்முறையாக 14 ஆகஸ்ட் 2018 அன்று அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.70-07 ஆகச் சரிந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்