TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 2 , 2024 267 days 348 0
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலத்தில் இயங்கும் ‘சுச்சேதா’ என்று பெயரிடப்பட்ட, இந்தியாவின் முதல் படகு கொச்சியில் அறிமுகப் படுத்தப் பட்டது.
    • V.O.சிதம்பரனார் துறைமுகம் ஆனது நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் மையத் துறைமுகமாகும்.
  • S.விஜயதரணி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான உறுப்பினர் பதவி காலியானதாக சட்டமன்றச் செயலகம் அறிவித்து உள்ளது.
  • பிரதமர் அவர்கள் இராஜ்கோட் (குஜராத்), பதிண்டா (பஞ்சாப்), ரேபரேலி (உத்தரப் பிரதேசம்), கல்யாணி (மேற்கு வங்காளம்) மற்றும் மங்களகிரி (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்விக் கழகங்களை (எய்ம்ஸ்) திறந்து வைத்தார்.
  • இந்திய சூரிய சக்தி கழக லிமிடெட் (SECI) நிறுவனமானது, சத்தீஸ்கரின் ராஜ்நந்த் காவ்ன் எனுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள, சூரிய சக்தியைப் பயன்படுத்தி ஆற்றலைச் சேமிக்கும் இந்தியாவின் மிகப்பெரிய மின்கல ஆற்றல் சேமிப்பு கட்டமைப்பினை (BESS) வெற்றிகரமாக இயக்கியுள்ளது.
  • புகழ்பெற்ற கஜல் (அரபுக் கவிதை) பாடகர் பங்கஜ் உதாஸ் சமீபத்தில் மும்பையில் காலமானார்.
  • மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வுகளில் ஒன்றான 2024 ஆம் ஆண்டு பாரத் டெக்ஸ் நிகழ்ச்சியானது டெல்லியில் தொடங்கப்பட்டது.
  • புனேவில் உள்ள தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் (NIN) மற்றும் அரியானாவின் ஜஜ்ஜரில் உள்ள தேவர்கானா கிராமத்தில் உள்ள மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (CRIYN) இரண்டு ‘ஆயுஷ் திட்டங்கள்’ சமீபத்தில் திறக்கப் பட்டன.
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், மத்திய மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஊழல் தடுப்பு ஆணையராக A.S. ராஜீவ் என்பவரை நியமித்துள்ளார்.
  • உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி A.M. கான்வில்கர் ஊழல் தடுப்பு குறை தீர்ப்பாளரான லோக்பால் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்