TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 4 , 2024 137 days 219 0
  • உலகப் பல்லுயிர்ப்பெருக்க கட்டமைப்பு நிதியத்தின் முதல் சபை கூட்டம் ஆனது சமீபத்தில் அமெரிக்காவின் வாஷிங்டன் DC நகரில் நடைபெற்றது.
  • மத்திய அரசானது, பொதுவான 'உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்' விதிகளை வகுப்பதற்காக வேண்டி, நிதித் துறைச் செயலாளர் T.V. சோமநாதன் அவர்கள் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
  • இந்தியக் கவிஞர்-அரசுமுறை அதிகாரி, நூல் ஆசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் அபய். K அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட 'Fool Bahadur' எனப்படும் முதல் மகாஹி மொழி புதினத்தின் ஆங்கில மொழிப் பெயர்ப்பானது பீகாரின் பாட்னா நகரில் வெளியிடப்பட்டது.
    • மகதி என்றும் அழைக்கப்படுகின்ற மகாஹி மொழி கிழக்கு இந்தியாவின் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பேசப்படும் இந்திய-ஆரிய மொழியாகும்.
  • உலகின் முதல் வேத கடிகாரம் ஆனது உஜ்ஜயினியில் கட்டமைக்கப்பட்டுள்ள 85 அடி உயர கோபுரத்தில் நிறுவப்பட்டுள்ளது.
    • இந்தக் கடிகாரம் ஆனது இரண்டு சூரிய உதயங்களுக்கு இடையே உள்ள காலத்தை 48 நிமிடங்கள் கொண்ட 30 பகுதிகளாக (மணிநேரமாக) பிரித்துக் காட்டும்.
  • இந்திய உழவர் உரக் கூட்டுறவு லிமிடெட் (IFFCO) நிறுவனமானது உலகின் முதல் 300 கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு முன்னணி கூட்டுறவு நிறுவனமாக மீண்டும் தரநிலைப் படுத்தப் பட்டுள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உலக வர்த்தக நிறுவனத்தின் 13வது அமைச்சர்கள் மாநாடு (MC) நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்