TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 8 , 2024 261 days 257 0
  • தேசிய இயற்கை மருத்துவக் கழகத்தின் "நிசர்க் கிராம் திட்டத்தின்" கீழ், சுமார் 250 படுக்கைகள் கொண்ட பல்துறை ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க சேவை மையத்துடன் கூடிய இந்தியாவின் முதல் அரசு இயற்கை மருத்துவ முறை மருத்துவமனை சமீபத்தில் புனேவில் திறக்கப்பட்டது.
  • தாய்லாந்தின் பட்டாயா நகரில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு BWF மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஷட்டில் (நெட்டிப் பந்து) வீரர்கள் மூன்று தங்கம், நான்கு வெள்ளி மற்றும் 11 வெண்கலம் உட்பட 18 பதக்கங்களை வென்றனர்.
  • 150 கோடி ரூபாய் ஒற்றை முறை நிதி ஆதரவுடன் இந்தியாவில் தலைமையகத்துடன் கூடிய சர்வதேச பெரும்பூனை இனங்கள் கூட்டணியை நிறுவச் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான சமுத்திர லக்ஷ்மனா (இருதரப்புக் கடல்சார் பயிற்சி) பயிற்சியானது சமீபத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப் பட்டினம் கடற்கரையில் நிறைவடைந்தது.
  • உதவி ஆய்வாளர் சுமன் குமாரி, எல்லைப் பாதுகாப்புப் படையில் முதல் பெண் ஸ்னைப்பர் துப்பாக்கி சுடும் வீரராக இணைந்து வரலாறு படைத்துள்ளார்.
  • துபாய் விளையாட்டுப் போட்டிகள் சபை மற்றும் கிராவிட்டி நிறுவனம் ஆகியவை இணைந்து முதன்முதலாக ஜெட் சூட் (புவிஈர்ப்பு விசைக்கு எதிராக பறக்க உதவும் அம்சங்கள் கொண்ட உடை) போட்டியினை நடத்தின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்