திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (IIST) ஆனது, முன்மொழியப்பட்ட பாரத் குறைக்கடத்தி ஆராய்ச்சி மையத்தினை அமைப்பதற்கான சாத்தியமான இடமாக "தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது".
ஜிண்டால் எஃகு (JSL) நிறுவனமானது, ஹரியானா மாநிலத்தின் ஹிசார் எனுமிடத்தில் அமைந்துள்ள அதன் எஃகு ஆலையில் பசுமை ஹைட்ரஜனின் முதல் பயன்பாட்டைத் தொடங்கியுள்ளது.
சத்தீஸ்கரில் உள்ள சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட் (தென்கிழக்கு நிலக்கரித் தளங்கள்) லிமிடெட் நிறுவனத்தின் கெவ்ரா சுரங்கம் ஆசியாவின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கமாக மாற உள்ளது.
அந்த நிறுவனம் ஆனது, அதன் வருடாந்திர உற்பத்தித் திறனை 70 மில்லியன் டன்களாக விரிவுபடுத்துவதற்காக சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றுள்ளது.