TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 11 , 2024 258 days 266 0
  • ஒருங்கிணைந்த வேளாண் செயல்பாட்டு மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆனது தேசிய தலைநகரில் உள்ள கிருஷி பவனில் திறக்கப்பட்டுள்ளது.
    • புரவலரும் எழுத்தாளருமான சுதா மூர்த்தி அவர்களின் பெயர் மாநிலங்களவையின் உறுப்பினர் பதவியில் நியமிக்கப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • பல புத்தகங்களை எழுதியுள்ள இவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் N.R. நாராயண மூர்த்தியின் மனைவியும், மூர்த்தி அறக்கட்டளையின் தலைவரும் ஆவார்.
  • முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே ஆகியோர் அடங்கிய, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்கள் வீழ்த்திய நபர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் சமீபத்தில் இணைந்துள்ளார்.
  • தட்டம்மை மற்றும் ரூபெல்லாவை எதிர்த்துப் போராடுவதற்கான நாட்டின் முன்னெடுப்புகளை அங்கீகரிக்கும் வகையில், தட்டம்மை மற்றும் ரூபெல்லா கூட்டமைப்பு ஆனது இந்தியாவிற்கு மதிப்புமிக்க தட்டம்மை மற்றும் ரூபெல்லா சாம்பியன் (வாகையர்) விருதினை வழங்கியுள்ளது.
  • ஆண்டிற்கு இருமுறை நடைபெறும் கடற்படைத் தளபதிகள் மாநாட்டின் 2024 ஆம் ஆண்டிற்கான முதல் மாநாடு ஆனது INS விக்ரமாதித்யா என்ற விமானம் தாங்கி கப்பலில் நடைபெற்றது.
  • கோவாவில் அமைந்துள்ள FLY91 விமானப் போக்குவரத்து நிறுவனத்திற்கு வணிக நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஒப்புதல் அளித்துள்ளது.
  • முதல் பாரத் நீராவி கொதிகலன் கண்காட்சி (2024) ஆனது, அசாம் மாநிலத்தின் கௌகாத்தியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்