இந்தியாவின் முதல் சிறிய அளவிலான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தி அலகு ஆனது மத்தியப் பிரதேசத்தில் உள்ள விஜய்ப்பூர் நகரில் திறக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் பாவ்நகர் அரசு மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டுள்ள 23 வயதான கணேஷ் பாரையா, உலகின் மிகக் குள்ளமான மருத்துவர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
குஜராத்தின் வடோதரா மாநகராட்சிக் கழகம் ஆனது, அங்கீகாரம் பெற்ற ஆசியாவின் முதல் மாநகராட்சிக் கழக பசுமைப் பத்திரத்தை வெளியிட்டதன் மூலம் 1 பில்லியன் ரூபாய் நிதியைத் (12.07 மில்லியன் டாலர்) திரட்டியுள்ளது.
சுழிய நிலை கார்பன் உமிழ்வு கொண்ட கட்டிடங்கள் செயல் திட்டத்தை (ZCBAP) தொடங்கியதன் மூலம், நிலையான மேம்பாட்டினை நோக்கி முதல் அடி எடுத்து வைத்துள்ள நாட்டின் முதல் நகரமாக நாக்பூர் மாறியுள்ளது.
டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஆனது, தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் ‘சிறந்த விமான நிலையம்’ என்ற விருதை பெற்றுள்ளது.
கிஷோர் மக்வானா, பட்டியலிடப்பட்ட சாதியினருக்கான தேசிய ஆணையத்தின் (NCSC) தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
லவ் குஷ் குமார் பட்டியலிடப்பட்ட சாதியினருக்கான தேசிய ஆணையத்தின் (NCSC) உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார்.
ஆசிஃப் அலி சர்தாரி, பாகிஸ்தானின் 14வது அதிபராகப் பதவியேற்றுள்ளார்.