திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மேம்பட்ட கணினித் திறன் மையத்தில் (C-DAC), “உத்திசார் பயன்பாட்டிற்கான மின்னணுப் பொருட்களுக்கான குறைக்கடத்தி சில்லுகள் & அமைப்புகள்” என்ற பெயரிலான இந்தியாவின் முதல் FutureLABS மையம் திறக்கப் பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வருவாய்ப் புலனாய்வு இயக்குனரகம் ஆனது, உதயசூரியன் (ரைசிங் சன்) என்ற ஒரு நடவடிக்கையின் கீழ் ஒரு பெரிய தங்கக் கடத்தல் நடவடிக்கையைத் தடுத்துள்ளது.
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, 2025 ஆம் ஆண்டிற்குள், ‘AsteriX ஆய்வகம்’ எனப்படுகின்ற ஒரு சிறிய விண்வெளி ஆய்வகத்தைச் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்துவதற்காக Vellon Space எனப்படும் விண்வெளி சார் புத்தொழில் நிறுவனத்துடன் இணைந்து நிதியுதவி வழங்குகிறது.