மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், புது டெல்லி மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 183 சில்லறை விற்பனை நிலையங்களில் எத்தனால் 100 எனப்படும் மாற்று வாகன எரிபொருளை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.
‘நௌசேனா பவன்’ எனப்படும் இந்தியக் கடற்படையின் பிரத்தியேக தலைமையகம் ஆனது டெல்லி இராணுவக் குடியிருப்பில் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே மேற்கொள்ளப்பட்ட இந்திய-மத்தியக் கிழக்கு ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மீதான ஒத்துழைப்பில் அரசுகளுக்கிடையேயான கட்டமைப்பு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை அளித்துள்ளது.
இந்தியாவின் நுமாலிகர் சுத்திகரிப்பு லிமிடெட் (NRL) நிறுவனம் ஆனது, தனது முதல் வெளிநாட்டு அலுவலகத்தினை வங்காளதேசத்தின் டாக்கா நகரில் திறந்துள்ளது.