தேர்தல் ஆணையம் ஆனது, மாற்றுத் திறனாளி வில்வித்தை வீராங்கனையும் அர்ஜுனா விருது பெற்றவருமான ஷீத்தல் தேவியை அதன் தேசிய PwD (மாற்றுத் திறனாளி) நபர்களின் அடையாளச் சின்னமாக அறிவித்துள்ளது.
புவனேஷ்வர் நகரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இந்தியாவின் முதல் உள்ளரங்க தடகள மற்றும் நீர் சார்ந்த விளையாட்டுகளுக்கான மையங்களை ஒடிசா அரசு திறந்து வைத்துள்ளது.
இந்திய இராணுவம் மற்றும் செஷெல்ஸ் நாட்டுப் பாதுகாப்புப் படைகள் இணைந்து 10வது ‘LAMITIYE-2024’ என்ற கூட்டு இராணுவப் பயிற்சியை நடத்துகின்றன.
2024 ஆம் ஆண்டு DHL உலக இணைப்பு அறிக்கையின்படி, DHL இணைப்புக் குறியீட்டில் உள்ள 171 நாடுகளில் இந்தியா 62வது இடத்தில் உள்ளது.